sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

அமரன் படம் பார்த்த நெகிழ்ச்சியில் பாராட்டி பேசிய சூர்யா ஜோதிகா... வெளியான புகைப்படங்கள் வைரல்..!

Sodukki News · 05 Nov 2024, 09:07 AM

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் தன்னுடைய காமெடி மற்றும் தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தியும் சிறு சிறு கதாபாத்திரங்களில் வெளிவந்தவர். இவருடைய திறமையால் தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவருடைய உழைப்புக்கு கிடைத்த பரிசு தான் சினிமா என கூட சொல்லலாம். தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இணைந்து நடித்த படம் தான் அமரன். இந்த படம் தீபாவளி அன்று வெளிவந்தது. ஒரு ராணுவ வீரரின் உண்மை கதையை கொண்டுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தினை பார்த்த ரசிகர்கள் மிகவும் இந்த படத்தினை பாராட்டி வருகிறார்கள்.

சினிமா பிரபலங்களும் இந்த படத்தினை பார்த்து சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவிக்கும் மற்றும் பட குழுவினருக்கும் வாழ்த்து கூறி வருகிறார்கள். அந்த வகையில் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் சூர்யா தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து இந்த படத்தினை பார்ப்பதற்கு சென்றுள்ளார். இந்த படத்தினை பார்த்த சூர்யா ஜோதிகா மற்றும் சிவகுமார் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி உள்ளனர். அவர்கள் பாராட்டி பேசிய அந்த புகைப் படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Comments (0)

Login to join the conversation.