sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

அஜித்தின் ரேஸ் கார் மற்றும் விஜய்யின் தவெக கொடி ஒரே கலர்.. விஜய்க்கு அஜித் ஆதரவா.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

Sodukki News · 28 Nov 2024, 05:39 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் வலம் வருபவர்கள் தான் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகளவில் உள்ளனர். மேலும் இவர்கள் இருவரும் இணைந்து ராஜபார்வை படத்தில் நடித்திருந்தனர். அதன் பிறகு இருவரும் இதுவரை இணைந்து நடித்தது இல்லை.இருவரும் அந்த அளவுக்கு முன்னணி ஹீரோவாக ஆகிவிட்டனர் என்றே சொல்லலாம். அதிலும் அஜித் தன்னுடைய ரசிகர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். அதில் ரசிகர்மன் றம்லாம் வேண்டாம் முதலில் அப்பா, அம்மா என்று குடும்பத்தை பாருங்கள் என்று சொன்னார்.

 அதன் பிறகு தன்னை யாரும் பட்ட பெயர் வைத்து அழைக்க வேண்டாம் என்று சொன்னார். அதுமட்டும் அல்லாமல் அரசியல் சம்மந்தமாக தன்னை யாரும் சம்மந்த படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இதையெல்லாம் பார்த்த ரசிகர்களுக்கு அவர் மீது மிகவும் மரியாதை ஏற்பட்டது. நடிப்பு மட்டும் அல்லாமல் அவர் கார் ரேஸ் ளையும் கில்லாடி என்றெ சொல்லலாம். விஜய்யும் அஜித்தும் முன்னணி நடிகர்கள் மட்டும் அல்ல இருவரும் நெருங்கிய நண்பர்கள் கூட. இருந்தாலும் இவர்கள் இருவரின் பாதை மற்றும் எண்ணங்கள் தனி தனி என்றே சொல்லலாம். அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் படம் நடிப்பதை நிறுத்தி விட்டு இனி அரசியலில்க் ஈடுபடலாம் என்று தமிழக வெற்றி கழகத்தை தொடங்கினர்.

 அதற்கான மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அவருடைய கட்சி கோடி சிவப்பு, மஞ்சள் வண்ணத்தில் வடிவமைக்க பட்டிருக்கும். இந்நிலையில் தற்போது மீண்டும் அஜித் கார் பந்தயத்தில் பங்கேற்க போகிறார். எனவும் அதற்காக அஜித் ஒரு குழுவினை அமைத்துள்ளார். தற்போது அவர் கார் ரேஸ் டீம் மற்றும் தன்போர்ஷே ஜி டி 2 கப் 24 ஹெச் திறன் கொண்ட காரை அறிமுகம் செய்துள்ளார். அந்த கார் கலர்ம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம் கொண்டதாக உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அஜித் விஜய் கட்சிக்கு ஆதரவாக உள்ளாரா. அதனால் தான் இந்த கலர் சூஸ் செய்துள்ளாரா என பல கேள்விகள் எழுந்து வருகின்றன. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

Comments (0)

Login to join the conversation.