sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

போட்டோவில் இருக்கும் இந்த குழந்தை யார்.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய சினிமா பிரபலம்.. யார் தெரிகிறதா..!

Sodukki News · 29 Oct 2024, 06:52 AM

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சுனைனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் காதலில் விழுந்தேன் என்ற தமிழ் படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார். இந்த படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தின் மூலமாக இவருக்க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இந்த படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது.

இந்த படத்தினை தொடர்ந்து இவருக்கு பல படங்கள் வர ஆரம்பித்தன. இந்த படத்தினை தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை, திருத்தணி என பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்தது. அணைந்து படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு சினிமா வாய்ப்புகள் வரவர குறைய ஆரம்பித்தன. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ரெஜினா திரைப்படமும் இவருக்கு பெரிதளவில் வரவேற்பை கொடுக்கவில்லை.

மேலும் அமேசான் பிரேமில் வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற தொடருக்கு பிறகு இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இவர் தன்னுடைய சிறு வயது போட்டோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சுனைனாவா இது என்று வியப்பில் ஆழ்ந்து உள்ளனர். மேலும் லைக்குகளை குவித்தும் வருகிறார்கள்.

Comments (0)

Login to join the conversation.