sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகை ஸ்ரீ லீலா.. எந்த நடிகருக்கு ஜோடியாக தெரியுமா..!

Sodukki News · 25 Nov 2024, 09:49 AM

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் புஷ்பா. இந்த படத்தில் நடிகை ரஷ்மிகா, பகத் பாசில், சுனில் அனுஷியா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகம் வெற்றி அடைந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து உள்ளனர்.

 இந்த படம் டிசம்பர் 5 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்து கொண்டுவருகிறது. தற்போது சென்னையில் ஆடியோ லான்ச்  நடைபெற்றது. அதில் பேசிய நடிகை ஸ்ரீலீலா கிஷ்கி பாடலை தொடர்ந்து தமிழில் அறிமுகம் ஆவது குறித்து பேசியிருந்தார். அனால் எந்த படம் என்பதை கூறவில்லை. நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்க கூடிய படம் தான் புறநானூறு.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்கிற தகவலும் உத்தேச முறையில் வெளிவந்தது.அமரன் பட வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் 23 வது படத்தினை ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து பாஸ் என்கிற படத்தில் நடிக்கிறார். அதனை தொடர்ந்து புறநானூறு படத்தில் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)

Login to join the conversation.