sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

அச்சு அசலாக அம்மாவை போல் இருக்கும் பூஜா ஹெக்டே.. தன்னுடைய அழகான குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள்..!

Sodukki News · 02 Nov 2024, 05:27 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். இந்த படம் இவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்று கொடுத்தது. இதனை தொடர்ந்து இவர் பல படங்கள் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதனை தொடர்ந்து விஜய்யின் அடுத்த படமான தளபதி 69 படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தினை எச் வினோத் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் ,நரேன் ,மம்தா பாபி தியால் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிரூத் இசையம்மைக்கிறார்.

இந்நிலையில் பூஜா ஹெக்டே தன்னுடைய அழகான குடும்பத்துடன் தீபாவளி பண்டிகை கொண்டாடிய போடோஸ்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசென்கள் அச்சு அசலாக அம்மாவை போல் உள்ளார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் இவருக்கு தீபாவளி வாழ்த்து கூறியும் வருகிறார்கள். இந்த போட்டோஸ்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Comments (0)

Login to join the conversation.