sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

நடிகை நயன்தாராவின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. கியூட் போஸ் கொடுக்கும் குட்டி நயன்.. வைரலாகும் புகைப்படம்..!

Sodukki News · 26 Nov 2024, 05:27 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்  வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் ஐயா என்ற படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இவர் நடித்த முதல் படமே இவருக்கு வெற்றி படம் தான். மேலும் அதனை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். அதுவும் இவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. தொடர்ந்து இவர் முன்னணி நடிகர்களான அஜித் , விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்து வந்தார்.

மேலும் நானும் ரவுடி தான் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயனும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் பெரும் விமர்சையாக நடந்தது. மேலும்  இவர்களுக்கு  உயிர் மற்றும் உலக் என 2 மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில அவங்களோட திருமண வாழ்க்கையை பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்கப்பட்டிருந்தது. அந்த படம்  நெட்ப்ளிக்ஸில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

 இந்நிலையில் நயனின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்று வருகிறது. மேலும் ரசிகர்கள் சிறு வயதில் கியூட் போஸ் கொடுக்கும் குட்டி நயன் என்று பாசிட்டிவ் கமெண்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள்.

pic1

pic2

pic3

pic4

Comments (0)

Login to join the conversation.