sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

பள்ளி, கல்லூரி பருவங்களில் துளியும் மேக்கப் இல்லாத மிருனாள் தாகூர்.. வியந்து போன ரசிகர்கள்..!

Sodukki News · 16 Nov 2024, 07:16 AM

சினிமாவில் சில பிரபலங்கள் முதலில் தன்னுடைய திறமையை சின்னத்திரையில் தான் காட்டிருப்பார்கள். அதனை தொடர்ந்து தான் அவர்களுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் நடிகை மிருனாள் தாகூர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபலம் ஆனவர். இவர் ஹிந்தி சீரியல் ஒன்றில் தங்கை காதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆனவர். அதனை தொடர்ந்து மராத்தி சினிமா மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார். இவர் நடிப்பில் வெளிவந்த சீதா ராமன் படம் மூலமாக இவர் மிகவும் பிரபலம் ஆனார்.

அந்த படம் இவருக்கு மிக பெரிய வெற்றி படம் என்றே சொல்லலாம். அந்த படத்தை தொடர்ந்து இவருக்கு ரசிகர்களும் அதிகமானோர். மேலும் இவருக்கு பட வாய்ப்பும் அதிகமாக வர தொடங்கியது. அந்த படத்தினை தொடர்ந்து Hi நானா, கல்கி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இப்போதெல்லாம் படம் நடிப்பதில் பிஸியாக இருக்கும் இவர் தற்போது சூர்யா நடிக்க இருக்கும் சூர்யா 45 படத்திலும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

 இந்த நிலையில் சினிமா பிரபலங்களின் சிறிய வயது போட்டோஸ் அவ்வபோது இணையத்தில் வைரல் ஆகி வரும் அந்த வகையில் தற்போது இவரின் பள்ளி கல்லூரி பருவ புகை படங்கள் வெளிவந்துள்ளன. அதில் அவர் மேக்கப் எதுவும் இல்லாமல் இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் மிர்னாலினியா இது என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது இவரின் சிறு வயது போட்டோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Comments (0)

Login to join the conversation.