sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

அரசியலுக்கு வருவீர்களா.. செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி.. சுவாரசியமாக பதில் சொன்ன நடிகர் சிவகார்த்திகேயன்..!

Sodukki News · 29 Oct 2024, 07:29 AM

தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமையால் முன்னணி நடிகராக உருவெடுத்து வந்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் தன்னுடைய காமெடி மற்றும் தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தியும் சிறு சிறு கதாபாத்திரங்களில் வெளிவந்தவர். இவருடைய திறமையால் தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

மேலும் இவர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இணைந்து நடித்திருக்கும் படம் அமரன். இப்படம் வருகிற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி அன்று வெளிவருகிறது. இந்த படத்தில் அமரணாக சிவகார்த்தியன் நடிக்கிறார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் சிவகார்த்திகேயன். அப்போது செய்தியாளர்கள் கேள்வி ஒன்றினை எழுப்பினார்கள். அதாவது அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டார்கள். அதற்க்கு சிவகார்த்திகேயன் நான் சினிமாவில் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. அரசியல் பத்தி எல்லாம் பிறகு பார்க்கலாம் என்று சுவாரசியமாக பதில் கூறி உள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றுள்ளது.

Comments (0)

Login to join the conversation.