sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

தடபுடலாக நடந்த அஜித்தின் தீபாவளி பார்ட்டி.. பார்ட்டியில் கலந்து கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன்..!

Sodukki News · 02 Nov 2024, 06:59 AM

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய திறமையால் தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவருடைய நடிப்பில் தீபாவளி அன்று வெளிவந்த அமரன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை முதல் நாளே பெற்றுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர் அஜித் பற்றி உருக்கமாக பேசியிருந்தார் .

அதாவரது நண்பர் ஒருவரின் தீபாவளி கெட் டுகெதர் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தாராம். அங்கு கதவை திறந்து பார்த்தால் நடிகர் அஜித் அங்கு இருந்தாராம். அவர் அப்போது சிவகார்த்திகேயனை பார்த்து welcome to the big league என கை கொடுத்து கூறினாராம். உன் வளர்ச்சியை பார்த்து மற்றவள்கள் இன்செக்கியூர் ஆகிறார்கள். welcome to the big league என்று கூறினாராம்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகரான அஜித் இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து வருகிறார். அவர் தீபாவளிக்காக ஒரு பார்ட்டி ஒன்றினை நடத்தி உள்ளார். அதில் நடிகர் சிவகார்த்திகேயன், மெர்சி சிவா உள்ளிடோர் கலந்து உள்ளனர். அப்போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளன. இந்த போட்டோஸ்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.

Comments (0)

Login to join the conversation.