sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

நகை காணவில்லை என போலீசில் புகார் அளித்த நடிகர் பார்த்திபன்.. மறுநாளே வாபஸ் வாங்கினார்..!

Sodukki News · 08 Nov 2024, 05:50 AM

தன்னுடைய குணச்சித்திர நடிப்பால் சினிமாவில் அங்கீகாரம் பெற்று பிரபலம் ஆனவர் நடிகர் பார்த்திபன். இவர் இயக்குனர், எழுத்தாளர், காமெடியன், வில்லன் என அனைத்து கதாபாத்திரத்திற்கும் ஏற்றவாறு தன்னுடைய நடிப்பு திறமை மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவர். மேலும் இவர் பல வெற்றி படங்களையும் கொடுத்துள்ளார். மேலும் இவர்க்கு என்று ரசிகர்கள் அதிகம். தன்னுடைய நடிப்பால் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும்.

இவர் தற்போதெல்லாம் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் என்றே சொல்லலாம். மேலும் இவருடைய இயக்கத்தில் இரவின் நிழல், டீன்ஸ் போன்ற படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் இவருடைய வீட்டில் இருந்து 12 சவரன் நகையை காணவில்லை என்று புகார் ஒன்றினை போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ளார்.

தற்போது போலீஸ் அதனை பற்றி தீவிரமாக விசாரித்து வந்த நிலையில் அவருடைய வீட்டில் வேலை பார்த்து வந்த ஒருவர் அந்த நகைகளை மறுபடி கொண்டு கொடுத்து விட்டாராம். இதனால் நடிகர் பார்த்திபன் தான் கொடுத்த புகாரை மறுநாளே சென்று வாபஸ் வாங்கியுள்ளார். இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments (0)

Login to join the conversation.