sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

நடிகர் ஆனந்த ராஜின் அழகான குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. வெளியான அழகிய குடும்ப புகைப்படம்...!

Sodukki News · 11 Nov 2024, 06:20 AM

தமிழ் சினிமாவில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பின் மூலமாக தன்னுக்கு என்று ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டவர் தான் நடிகர் ஆனந்தராஜ். மேலும் இவர் பல படங்களில் தன்னுடைய வில்லன் கதா பாத்திரத்தில் கச்சிதமாக நடித்து படங்களுக்கு வெற்றியினை வாங்கி தந்துள்ளார். மேலும் இவர் வில்லனாக மட்டும் அல்லாமல் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். மேலும் இவருக்கு என்று ரசிகர்கள் அதிகம். மேலும் இவர் வில்லனாக நடித்த பாட்சா மற்றும் ஏழுமலை படம் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றது.

மேலும் இவர் தன்னுடைய நகைசுவை நடிப்பின் மூலமாக மரகத நாணயம் படத்தில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். இவர் நடிக்க ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவரின் அழகிய குடும்ப புகை படங்கள் வெளிவந்துள்ளன. இதில் அவர் தன்னுடைய மகன், மகள் மற்றும் மனைவி உடன் இருக்கிறார். இந்த போட்டோஸ்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Comments (0)

Login to join the conversation.