sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

80'ஸ் களில் கவுண்டமணியுடன் கலக்கிய நடிகை இவரை ஞாபகம் இருக்கிறதா.. தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க..

Sodukki News · 29 Oct 2024, 09:49 AM

தமிழ் சினிமாவில் 80's காலகட்டத்தில் காமெடி நடிகர்களாக நடித்தவர்கள் கவுண்டமணி, செந்தில். இவர்களுடன் சேர்ந்து காமெடியில் கலக்கியவர் தான் நடிகை அனுஜா ரெட்டி. இவர் கவர்ச்சி நடிகையாகவும் நடித்துள்ளார். 14 வயதினிலே என்ற படத்தின் மூலமாக தன்னுடைய நடிப்பு திறமையை காட்டி மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றவர். மேலும் இவர் பல படங்களில் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். மேலும் இவர் நடிப்பதற்கு முன்பு முதலில் நடனத்தில் தான் தன்னுடைய திறமையை காட்டினார்.

அதன் பிறகு தான் இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவர் நடித்த முதல் வசந்தம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு சினிமாவில் பல பட வாய்ப்புகள் கிடைத்தது. இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும் இவர் 200 க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பவர். இவர் தற்போது அவருடைய போட்டோஸ்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோஸ்கல் தற்போது வைரல் ஆகியும் லைக்குகளை குவித்தும் வருகிறது.

Comments (0)

Login to join the conversation.